போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 72 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகள் போலீசார் இடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
அமெரிக்க படங்களில் காட்டுவது போல இந்தியாவிலும் பல சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர். இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர்.
தொடர் கொலைகள்.. ஒரே மாதிரி ஸ்டைலில் கொலை செய்யும் ஆட்கள் என்று பல சீரியல் கொலைகாரர்கள் இந்திய கிரைம் வரலாறு முழுக்க நிறைந்து கிடைக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் மத்திய பிரதேசம் சீரியல் கில்லர் ஒருவர் புதிதாக தோன்றி இருக்கலாம் என்று அம்மாநில போலீசார் சந்தேகிக்கின்றனர்.
என்ன நடந்தது?
அதன்படி மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் 3 செக்யூரிட்டிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொலை செய்யப்பட்ட விதம்தான் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சாகர் என்று பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்த கல்யாண் லோதி என்ற பாதுகாவலர் கொலை செய்யப்பட்டார். இவர் இரண்டு நாள் முன் இரவு கொலை செய்யப்பட்டார். இவருக்கு வயது 50 ஆகிறது.
கொலை
இவரின் தலையில் சுத்தியல் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இதை தொடர்ந்து சாகரில் வேறு ஒரு பகுதியில் கல்லூரி வாசலில் இரவு நேர காவலராக இருந்தவர் மறுநாள் இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் பெயர் ஷாம்பு நாராயணன் துபே. இவரின் வயது 60. இவரின் தலையில் கல்லை வைத்து அடித்து கொலை செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. இரண்டு கொலைகளும் தலையில் கொடுமையாக தாக்கி செய்யப்பட்ட கொலைகள்.
நேற்று இரவு
இதையடுத்து நேற்று இரவு சாகரில் மோதி நகர் என்று பகுதியில் வீட்டு வாசல் ஒன்றில் பாதுகாப்பில் இருந்த மங்கள் என்ற 50 வயது பாதுகாவலர் கொலை செய்யப்பட்டார். இவரின் தலையில் கட்டையை வைத்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைகள் அனைத்தும் ஒரே மாதிரியான ஸ்டைலில் இருந்துள்ளது. சரியாக பாதுகாவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பாதுகாவலர்கள் கொல்லப்பட்ட இடத்தில் எந்த திருட்டும் நடக்கவில்லை.
திருட்டு
இந்த கொலைகள் ஒரே மாதிரி இருப்பதால் மத்திய பிரதேசத்தில் உள்ள சாகரில் புதிய சீரியல் கில்லர் தோன்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைகளை செய்தது ஒரே ஆள் தானே.. இல்லை ஒரு கும்பலா.. அல்லது வேறு வேறு ஆட்களோ என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் கொலைகளால் மக்கள் இடையே சீரியல் கில்லர் பற்றிய பயம் தொற்றிக்கொண்டுள்ளது.