கனேடிய மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்: கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ


தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் ஸ்மித் மற்றும் அவரது நிர்வாகக் குழுவை ஆதரிப்பதாக…

பெடரல் அரசும் கனேடிய மக்களும் நம்பிக்கை இழந்துவிட்டதாக பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

ஹொக்கி கனடாவின் தலைமையின் மீது பெடரல் அரசு மற்றும் கனேடிய மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதை உணர்ந்துகொள்ள நிர்வாகிகள் தரப்பு தாமதிக்கும் என்றால், அது மேலதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் பிரதமர் ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹொக்கி கனடாவின் இயக்குநர்கள் குழு இந்த வார தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் ஸ்மித் மற்றும் அவரது நிர்வாகக் குழுவை ஆதரிப்பதாகக் கூறியிருந்தது.

கனேடிய மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்: கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ | Canadians Have Lost Faith Justin Trudeau

@Bloomberg

ஹொக்கி கனடா அமைப்பின் தலைமையை மாற்றுவதற்கான கோரிக்கைகள் இருந்தபோதிலும் ஹொக்கி கனடாவின் இயக்குநர்கள் குழு குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே அரசும் கனேடிய மக்களும் நம்பிக்கை இழந்துவிட்டதாக பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
ஹொக்கி கனடா அமைப்பானது 2003 மற்றும் 2018 உலக ஜூனியர் அணிகளின் வீரர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை கையாண்டதற்காக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் இது இரண்டாவது முறையாக பிரதமர் ட்ரூடோ கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.