சென்னை: சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட முயன்ற வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ஆனந்த் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
