ஜெயலலிதா காரை கைப்பற்ற ரூட் போடும் ஓபிஎஸ்… வழிவிடுவாரா தம்பிதுரை?

சென்னையில் ஜூலை 11 ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், கட்சியில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலைதான் நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அதிரடி தீர்ப்பு அளித்திருந்தது.

இந்த தீர்ப்பின்படி, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாமல் போய் உள்ளதுடன்,

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தொடர்கிறார். ஆனால், அவர் கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி இபிஎஸ் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் செய்துள்ள மேல்முறையீட்டை விசாரிக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், பொதுக்குழு தொடர்பான தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது.இப்படி அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- இபிஸ் இருதரப்பிலும் சட்டப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்க, சப்தமில்லாமல் மற்றொரு சம்பவத்தை செய்யும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளாராம் ஓபிஎஸ்.

அது என்ன சம்பவம் என்று டெல்லி வட்டாரத்தில் விசாரித்தால், 1980 களில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற ராஜ்யசபா எம்பியாக இருந்த ஜெயலலிதா, டெல்லியில் தான் பயணிக்க மாருதி 800 கார் ஒன்றை வைத்திருந்திருந்தார். எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் அவர் தமிழக அரசியலில் முழு கவனம் செலுத்தி வந்ததால், டெல்லி பக்கம் அவ்வளாக போகவில்லை. ஆனால் அவர் எம்பியாக இருந்தபோது பயன்படுத்திய கார் மட்டும் இன்னும் டெல்லியிலேயே இருக்கிறதாம்.

முன்பு ராஜ்சபா எம்பியாக இருந்த மைத்ரேயன் ஜெயலலிதாவின் காரை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அதனை அதிமுகவின் ராஜ்யசபா எம்பியாக இருக்கும்

வைத்துள்ளாராம்.

இந்த நிலையில், டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அங்கு ஜெயலலிதா பயன்படுத்தி பொருட்களை கண்காட்சியாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த பொருட்களுடன் ஜெயலலிதாவின் மாருதி 800 காரும் அங்கு காட்சி வைக்கப்பட உள்ளதாம்.

ஜெயலலிதா பயன்படுத்தியது என்ற பெருமை வாய்ந்த இந்த காரையும், புதிய கட்சி அலுவலகத்தையும் தன்வசப்படுத்த ஓபிஎஸ் தற்போது திட்டமிட்டுள்ளாராம். இந்த திட்டத்தை தன் மகனும், அதிமுகவின் ஒரேயொரு மக்களவை எம்பியுமாக உள்ள ஓ.பி.ரவீந்திரநாத் மூலம் செயல்படுத்தும் முடிவுடன் அவர் காய்களை நகர்த்தி வருகிறாராம்.

ஆனால் தம்பிதுரை இபிஎஸ்சின் ஆதரவாளர் என்பதால், அவரிடமிருந்து காரை கைப்பற்றுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்பதையும் ஓபிஎஸ் உணர்ந்துள்ளார். ஜெயலலிதா ராஜ்யசபா எம்பியாக இருந்தபோது வைத்திருந்த கார், கட்சியின் ராஜ்யசபா எம்பிக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஒருவேளை தம்பிதுரை அன்கோ சொன்னால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதனை எதிர்த்து ஓபிஎஸ் சட்டபோராட்டத்தில் இறங்கினாலும் இறங்கலாம் என்கின்றன டெல்லி அதிமுக வட்டாரங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.