கோவை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். அறிக்கைகளை நாங்களே வைத்துக்கொள்ள மாட்டோம்; பகிரங்கமாக நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம். விசாரணை அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.