பாசம், பந்தம், அன்பு என இவை இல்லாமல் வாழ முடியாது என பலவாறு கூறிக் கொண்டாலும், பணம் இல்லாத வாழக்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. இப்படி வைத்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் தூங்கி கொண்டிருக்கிறீர்கள், திடீரென எழுந்து பார்க்கும் போது, கோடி கோடியா பேங்க் அக்கௌன்ட்ல பணம் இருந்தா எப்படி இருக்கும்..
ஆசை தான் என்ன செய்வது எனக் கேட்கிறீர்களா. இது போன்ற ஒரு சம்பவம் தான் ஒரு குடும்பத்தினருக்கு நடந்துள்ளது. ஆனால் அந்த பணத்தை திரும்ப தர வேண்டிய சூழலில் அக்குடும்பம் வசமாக சிக்கியும் உள்ளது.
ஆஸ்திரேலியா, மெல்போர்ன் நகரத்தில் தேவமனோகரி மணிவேல் மற்றும் அவருடைய தங்கை வசித்து வருகின்றனர். எதேச்சையாக ஒரு நாள் அவர்களின் பேங்க் அக்கௌன்ட்டை பார்க்கையில் 10,474,143 அமெரிக்க டாலர் இருந்துள்ளது. 100 டாலருக்கு (இந்திய பணமதிப்பில் 8,000) பதிலாக 10.4 மில்லியன் டாலர் (82 கோடி) தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது.
எப்படி இவ்வளவு பெரிய தொகை வந்ததென்று ஆராயாமல், அவர்கள் செலவழித்து வந்துள்ளனர். மணிவேல் தன்னுடைய குடும்ப உறுப்பினர் உட்பட ஆறு பேருக்கு பணத்தை பரிசாக அளித்துள்ளார். நான்கு படுக்கையறை, நான்கு குளியலறை கொண்ட மேன்ஷனுக்கு 1.35 மில்லியன் டாலர் தொகையை செலவழித்துள்ளார். சீரும் சிறப்புமாக ஏழு மாதங்கள் வரை உயர்தர வாழ்க்கையை இவர்களின் குடும்பம் வாழ்ந்துள்ளது.
சிங்கப்பூரை தளமாக கொண்ட வர்த்தக நிறுவனத்தின் பண பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிழையால் தொகையானது, தவறுதலாக இவர்களின் அக்கௌன்ட்டில் விழுந்துள்ளது. ஏழு மாத காலத்திற்கு பிறகு கிரிப்டோ.காம் இதைக் கண்டறிந்தது.
கையும் களவுமாக சிக்கிய இவர்கள் சட்ட ரீதியான சிக்கல்களை தற்போது சந்தித்து வருகின்றனர். அதோடு இவர்கள் அந்த முழு தொகையையும், வட்டியோடு செலுத்த வேண்டும் என்ற சூழலில் இப்போது உள்ளனர்.
“ஆசைப்படுங்கள்.. அடுத்தவர் பணத்திற்கு அல்ல”..