தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. குறிப்பாக சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு 1716 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது.
2018ம் ஆண்டுக்கு பிறகு மாதாந்திர அளவில் தங்கம் விலையானது, ஆகஸ்ட் மாதத்தில்
ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது.
இது தொடர்ந்து 5வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் சரியலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக இன்று கவனிகக் வேண்டிய விஷயங்கள் என்ன? முக்கிய லெவல்கள் என்ன? விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
டாலர் Vs தங்கம்
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை குறைக்க பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பில் பிரதிபலிக்கலாம்.

1 மாத சரிவில் தங்கம்
ஆக இனி வரவிருக்கும் மாதங்களிலும் டாலரின் மதிப்பு வலுவடைய காரணமாக இருக்கலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். வட்டி விகிதம் மீண்டும் 4% மேலாக உயர்த்தப்படலாம் என்று அமெரிக்க மத்திய வங்கியானது சுட்டிக் காட்டியுள்ளது. ஆக இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் தங்கம் விலையானது 1 மாத சரிவில் காணப்படுகின்றது.

தொடரும் நிகழ்வு
மேலும் வட்டி விகிதமானது வரவிருக்கும் கூட்டத்தில் மட்டும் அல்ல, அடுத்த ஆண்டிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக மேலும் தங்கம் விலையானது மேலும் அழுத்தத்திலேயே இருக்கலாம். இது ஏற்றம் கண்டாலும் பெரியளவில் இருக்காது என ஒரு தரப்பு நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கவனிக்க வேண்டிய காரணிகள்
ஐரோப்பிய நாடுகளிலும் வட்டி விகிதமானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு ஐரோப்பிய மத்திய வங்கியினையும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். டாலரின் மதிப்பானது தொடர்ந்து தங்கம் விலைக்கு ஆதரவாக இருந்து வந்தாலும், மறுபுறம் பணவீக்கம், உலகளாவிய அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்தம் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

காமெக்ஸ் தங்கம் விலை?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 12.35 டாலர்கள் குறைந்து, 1715.85 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று கீழாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 1.62% குறைந்து, 17.593 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலையும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
gold price on 1st September 2022: Rate hike may pushes gold price in long term
gold price on 1st September 2022: Rate hike may pushes gold price in long term/திடீரென சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?