இந்திய அலுவலகத்தில், பணியிடத்தில் ஆரோக்கியமான எல்லைகளை அமைக்க வேண்டும் என்பது தொற்று நோய் பாதிப்புக்கு பிந்தைய உலகில் முக்கிய விவாத பொருளாக உள்ளது.
லாக்டவுன் காலத்தில் மக்கள் தங்களை அல்லது தங்கள் வணிகங்களைச் சரிவில் இருந்து மீட்கவும், மேம்படுத்தவும் அதிக மணிநேரம் பணியாற்றியிருக்கலாம். ஆனால் எல்லா நேரத்திலும் பிஸியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பல எச்சரிக்கைகளை உங்கள் மனதிற்கும், உடலுக்கும் அளிக்கிறது.
வறண்டு போன சந்தை.. ஸ்டார்ட்ர்அப் நிறுவனங்களைக் கைப்பற்றும் VC-க்கள்.. என்ன நடக்கிறது..?!
கடுமையான உழைப்பு
பொதுவாக ஒருவர் தங்கள் கடமையைத் தாண்டி (மேலும்) வேலைகளைச் செய்கிறார் என்றால் அதற்குச் சிறந்த ஊதியம், ஒரு புதிய பதவி மற்றும் புதிய நிறுவனம் போன்ற பல காரணிகள் இருக்கும், இது சரியானது தான், ஆனால் இது வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும் என்ற எண்ணம் நிறுவனத்திற்கு வருவது ஆபத்து தான்.
பாம்பே ஷேவிங் கம்பெனி
இதைப் பிரதிபலிக்கும் வகையில் பாம்பே ஷேவிங் கம்பெனியின் நிறுவனர்-சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே, இளம் வயதில் பணியில் சேர்பவர்கள் அதிக நேரம் பணியாற்ற வேண்டும் என்று லிங்கிடுஇன் தளத்தில் பதிவிட்டார். இதற்கு மொத்த ஊரும் அவரைக் கிண்டல் செய்தும் திட்டியும் வருகிறது.
18 மணி நேரம் வேலை
உங்களுக்கு 22 வயதாகி, வேலையில் புதிதாகச் சேரும்போது, உங்களை வேலையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள் மற்றும் ஆரோக்கியமாக இருங்கள், ஆனால் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் என்று குறைந்தது 4-5 வருடங்கள் பணியாற்றுங்கள்”என்று சாந்தனு தேஷ்பாண்டே தனது லிங்க்ட்இன் கணக்கில் பதிவிட்டு உள்ளார்.
இளைஞர்கள்
வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுதல், புத்துணர்ச்சி எனப் போன்றவற்றை முக்கியம் என்று தங்களைத் தாங்களே நம்பிக் கொள்ளும் பல இளைஞர்களை நான் பார்க்கிறேன். ஆனால் அது இளம் வயதிலேயே இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார் சாந்தனு தேஷ்பாண்டே.
சச்சின் டெண்டுல்கர்
இந்தப் பதிவிற்குக் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டரில் 18 வயதுடையவர்கள் ஒரு நாளுக்கு 4-5 மணிநேரம் பணியாற்றினால் போதும் என்பது என்னுடைய கருத்து எனத் தெரிவித்துள்ளார்.
நெட்டிசன்
18 மணிநேரம் வேலை, 6 மணிநேரம் தூக்கம், இதில் நன்றாகச் சாப்பிட்டு, ஆரோக்கியமாக இருப்பது எப்படி? எனக்குப் புரியவில்லை, 18 மணிநேரம் வேலை செய்வது என்பது நிறுவனத்திற்கு நல்லது, ஆனால் 20களிலேயே BP, கவலை, இதர பல உடல் உபாதைகள் எதிர்கொள்ளத் தயாராகுங்கள். எனக்கும் அனைவருக்கும் ஒரு பாடம் – ஒரு நிறுவன தலைவர் சொல்லும் அனைத்தும் உண்மையல்ல என்று அட்வைஸ் செய்துள்ளார் நெட்டிசன்.
bombay shaving company ceo Says Youngsters Should Work 18 Hours a Day
bombay shaving company ceo Says Youngsters Should Work 18 Hours a Day தினமும் 18 மணிநேரம் வேலை பாருங்க.. சீஇஓ பதிவால் கடுப்பான நெட்டிசன்..!