திருமண நிகழ்ச்சியிலிருந்து திரும்பிய இளைஞர் படுகொலை..! 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே திருமண நிகழ்ச்சியிலிருந்து திரும்பிய இளைஞரை 4 பேர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராபின் என்ற அந்த இளைஞர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, இரவில் நண்பருடன் வீடு திரும்பிகொண்டிருந்தார்.

அவர்களை பின்தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 நபர்கள், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராபினை பட்டாக்கத்தியால் வெட்டினர். இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த ராபினை 4 பேரும் சூழ்ந்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். ராபினின் நண்பரான கமல் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தலைதெறிக்க தப்பியோடினார்.

போலீசார் விசாரணை மேற்கொண்டு திருமணத்திற்கு சென்ற நண்பர்கள் யார் அங்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதா அல்லது முன் விரோதம் காரணமாக இவரை கொலை செய்தனரா என்ற கோணத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவு உதவியுடன் தப்பியோடிய கொலை கும்பலை தேடிவருகின்றனர்..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.