திரையரங்குகளில் புறக்கணிக்கப்படுகிறதா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது: புலம்பும் ரசிகர்கள்

சென்னை: பா. ரஞ்சித் இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய முயற்சியில் நட்சத்திரம் நகர்கிறது

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என தரமான படங்களை கொடுத்துள்ள பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது, நேற்று திரையரங்குகளில் வெளியானது. கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைப் பின்னணியில் உருவாகியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மீண்டும் அரசியல் பேசிய ரஞ்சித்

மீண்டும் அரசியல் பேசிய ரஞ்சித்

பா ரஞ்சித்தின் திரைப்படங்களில் எப்போது மிகத் தீவிரமான அரசியல் உரையாடல்கள் இருக்கும் அதைப் போலவே நட்சத்திரம் நகர்கிறது திரைப்படமும் பெண் தெய்வ வழிபாட்டின் வரலாறு, அம்பேத்கரின் அரசியல், ஆணவ கொலை, LGBTQ, காதலும் அதன் அரசியலும், இளையராஜாவின் இசையின் மீதான அரசியல் என தமிழ், இந்தியச் சமூகம் பேசாத பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளது. ரஞ்சித்தின் இந்த துணிச்சலை பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

திரையரங்குகளில் புறக்கணிக்கப்படுகிறதா?

திரையரங்குகளில் புறக்கணிக்கப்படுகிறதா?

நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை முன்னிட்டு, விக்ரமின் கோப்ரா, ரஞ்சித்தின் நட்சத்திரம் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. ஆனால், சில திரையரங்குகளில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரையிடப்படவில்லை என சொல்லப்படுகிறது. ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கிவிட்டு காத்திருந்தும் அவர்களுக்காக படம் திரையிடப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில திரையரங்குகளில் பாதி படத்திற்கு மேல் ஒளிபரப்பவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் புலம்பல்

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் புலம்பல்

இந்நிலையில், திரையரங்குகளுக்கு சென்று நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர். “Greencinemas இல் இடைவேளைக்குப் பிறகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 35 நிமிடம் திரையிட தாமதமானது. பொறுமையிழந்து பாதியிலேயே வந்துவிட்டோம்” என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்

வெளிமாவட்டங்களிலும் இதே நிலைதான்

வெளிமாவட்டங்களிலும் இதே நிலைதான்

அதேபோல், சென்னை அண்ணாநகரில் உள்ள வீ.ஆர். மாலில், ரசிகர்கள் 2 மணி நேரமாக காத்திருந்தும் ஷோ கேன்சல் செய்யப்பட்டதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இதுகுறித்து முழுமையான காரணங்கள் தெரியாததால், ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.