நடுவானில் விமானத்தில் தனது பணியைத் துவங்க இருக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமர்


வரும் திங்கட்கிழமை, நவம்பர் மாதம் 5ஆம் திகதி, பிரித்தானியாவின் புதிய பிரதமர் அறிவிக்கப்பட உள்ளார்.

அவர் தனது பணிகளை விமானத்தில் துவங்க இருக்கிறார்.

பிரித்தானிய பிரதமர் தேர்வில் இம்முறை பல புதுமைகள் நிகழ இருக்கின்றன…

ஒன்று பிரதமரின் பதவியேற்பு விழா இம்முறை பக்கிங்காம் அரண்மனையில் அல்ல. பொதுவாக, புதிதாக பிரதமராக பொறுப்பேற்பவர் பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்று பிரித்தானிய மகாராணியாரை சந்திப்பார். மகாராணியார் புதிய பிரதமரின் கைகளை முத்தமிடுவார். பதிலுக்கு, பிரதமர் மகாராணியாரின் கைகளை முத்தமிடுவார். இது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்துவரும் பிரித்தானிய மரபு.

ஆனால், இம்முறை மகாராணியாருக்கு பயணம் செய்வதில் பிரச்சினைகள் உள்ளதால், அவரை பயணத்தை தவிர்க்குமாறு அவருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள். ஆகவே, தற்போது ஸ்காட்லாந்திலுள்ள பால்மோரல் மாளிகையில் தங்கியிருக்கும் அவர் பக்கிங்காம் மாளிகைக்குச் செல்வதற்கு பதிலாக, புதிதாக பதவியேற்கும் பிரதமர், பால்மோரல் மாளிகைக்கு விமானத்தில் பறந்து வந்து மகாராணியாரை சந்திக்க இருக்கிறார்.

நடுவானில் விமானத்தில் தனது பணியைத் துவங்க இருக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமர் | Britain S New Prime Minister

Credit: Getty

அத்துடன், இம்முறை புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொள்பவர், தனது பணியை, அது முதல் கடிதமாக இருக்கட்டும், அல்லது முதல் கையெழுத்தாக இருக்கட்டும், நடுவானில், அதாவது பால்மோரல் மாளிகையிலிருந்து லண்டனுக்குத் திரும்பும் வழியில், விமானத்தில்தான் துவக்க இருக்கிறார்.

இதற்கிடையில், தனது ராஜினாமாவை வழங்குவதற்காக அரசு விமானத்தில் பால்மோரல் மாளிகைக்குச் செல்லும் போரிஸ் ஜான்சன், அதற்குப் பிறகு அவர் பிரதமர் இல்லை என்பதால், அவர் அரசு விமானத்தில் வரமுடியாது. அதாவது அவரைக் கழற்றி விட்டுவிடுவார்கள். அவர்தான் அதற்குப் பின் தனது சொந்த பயண ஏற்பாடுகளை செய்துகொள்ளவேண்டும்.

இந்நிலையில், புதிதாக பிரதமராக பொறுப்பேற்பவர், அது லிஸ் ட்ரஸ்ஸானாலும் சரி, ரிஷி சுனக்கானாலும் சரி, திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு பிரதமர் இல்லத்தில் உரையாற்ற இருக்கிறார். இது வழக்கமாக நிகழ்வதுதான்!
 

நடுவானில் விமானத்தில் தனது பணியைத் துவங்க இருக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமர் | Britain S New Prime Minister

Credit: PA

நடுவானில் விமானத்தில் தனது பணியைத் துவங்க இருக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமர் | Britain S New Prime Minister

Credit: Pacemaker



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.