நிதிஷ் குமாரை சந்திரசேகா் ராவ் அவமதித்துவிட்டதாக ஒருதரப்பினரும், சந்திரசேகா் ராவ் பேசிக்கொண்டிருக்கும்போதே நிதிஷ் குமார் எழுந்தது தவறு என மற்றொரு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகா் ராவ் முயற்சித்து வருகிறாா். இந்நிலையில் நேற்று அவர் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாரை பாட்னாவில் சந்தித்துப் பேசினார்.
இதன்பின்னர் நிதிஷ் குமாரும், சந்திரசேகா் ராவும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். இறுதியில், செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருக்கும்போதே நிதிஷ் குமாரும் தேஜஸ்வி யாதவும் இருக்கையை விட்டு எழுந்தனர். அப்போது அவர்களை அமருமாறு சைகை செய்தார் சந்திரசேகா் ராவ்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் இருப்பாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு சந்திரசேகா் ராவ் பதில் சொல்ல ஆரம்பித்ததும், நிதிஷ் குமார் மீண்டும் எழுந்து இந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று சந்திரசேகா்ராவை வலியுறுத்தினார். பின்னர் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமாரை ஆதரிப்பீர்களா என பத்திரிகையாளர்கள் கேட்போது அதுகுறித்து கேட்க வேண்டாம் என்று நிதிஷ் குமார் செய்தியாளர்களை நோக்கி சைகை செய்தார்.
‘நாம் போகலாம்…’ என்று நிதிஷ் குமார் கூற, அதற்கு சந்திரசேகா் ராவ் ‘பதில் சொல்லிவிட்டு வருகிறேன், இருங்கள்’ என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நிதிஷ் குமாரை சந்திரசேகா் ராவ் அவமதித்துவிட்டதாக ஒருதரப்பினரும் சந்திரசேகா் ராவ் பேசிக்கொண்டிருக்கும்போதே நிதிஷ் குமார் எழுந்தது தவறு என மற்றொரு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: மருத்துவமனையின் அலட்சியப்போக்கு – தாயின் மார்பிலேயே 5 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM