மத்திய மலைநாட்டின் மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள நீரேந்தும் பிரதேசங்களில் கடும் மழை பெய்வதனால் நுவரெலியா மாவட்டத்தில் பல நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நோட்டன் பிரிட்ஜ், விமலசுரேந்திர நீர் தேக்கம் ஆகியவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் அமைந்துள்ள லக்சபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் 3 திறக்கப்பட்டுள்ளன. காசல்ட்ரீ, மௌசாகலை நீர்த்தேக்கங்களின் நீர் வழிந்தோடும் நிலையில் இருக்கிறது. இதற்கமைவாக கேனியன், லக்சபான, புதிய லக்சபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்கள் மூலமான மின் உற்பத்தி ஆகக்கூடுதலான வகையில் மேற்கொள்ளப்படுவதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.