பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்வரே நியமனம் செய்யும் மசோதா! கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்…

திருவனந்தபுரம்: பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை கேரள சட்டமன்றம்  நிறைவேற்றியது. ஏற்கனவே தமிழநாட்டில் இதுபோன்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது கேரள அரசு நிறைவேற்றி உள்ளது.

கேரள மாநிலத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படும் விஷயத்தில், மாநில முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.  கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் அரசுக்கும் இடையே சில காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை கேரள சட்டமன்றம்  நிறைவேற்றி உள்ளது.

இதற்கிடையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு,  அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், நிர்வாக முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பான பிரச்சினைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கேரளாவில் ‘லோக் ஆயுக்தா’ உருவாக்கப்பட்டது.

கேரளாவின் முன்னாள் கம்யூனிஸ்ட் முதல்-மந்திரி ஈ.கே.நாயனார் தலைமையிலான அரசு கொண்டு வந்த இந்த சட்டம், 23ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருத்தங்களுடன் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மசோதா மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக, எதிர்கட்சிகள் அவையை புறக்கணித்தன. இந்த மசோதாவுக்கு கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளிப்பாரா என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.