வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் அப்பீல் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 11ல் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதனை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இணை ஒருங்கிணைப்பாளர் ‘பழனிசாமி தரப்பு ஜூலை 11ல் கூட்டிய பொதுக்குழு செல்லாது; ஜூன் 23க்கு முந்தைய நிலை தொடரும். ‘ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் ஒப்புதல் இன்றி, நிர்வாக குழு அல்லது பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது’ என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவில் கூறியிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த ‘அப்பீல்’ வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது. அப்போது பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் , ஆகியோர் அடங்கிய அமர்வு, இரு தரப்பினரின் வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக ஆக.,26-ம் தேதி மாலை 3 மணிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நாளை (செப்.02) தீர்ப்பு வெளியாகிறது….
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement