வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன் : பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் பழமைவாத கட்சித் தலைவர் தேர்தல் பிரசாரம் முடிந்தது. இதைத் தொடர்ந்து ஓட்டுப்பதிவு துவங்குகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடந்து வந்தது.
இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.
தலைவர் பதவிக்கான தேர்தலின் கடைசி கட்டத்தில், கட்சி உறுப்பினர்கள், 1.60 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர். இதற்கான ஓட்டுப் பதிவு துவங்குகிறது. வரும், 5ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
இதையடுத்து இரு வேட்பாளர்களின் கடைசி பிரசார கூட்டம், லண்டனின் விம்ப்ளேயில் நடந்தது. அப்போது பேசிய ரிஷி சுனக், தன் தாய் உஷா, தந்தை யஷ்விர், மனைவி அக் ஷதா மூர்த்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement