காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் புத்தளம் பிரதேச செயலகத்தில் காணிக் கச்சேரி இன்று (01) காலை 9:30
மணிக்கு புத்தளம் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காக ஏற்கனவே அனுமதிகோரியவர்கள் பின்வரும் ஆவணங்களுடன் வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமது தேசிய அடையாள அட்டை,
வசிக்கும் இடத்தின் வாக்காளர் பட்டியல்,
வசிக்கும் இடத்தின் மின்சாரப் பட்டியல் அல்லது நீர் விநியோகப்பட்டியல், போன்றவற்றின் மூலம் தாம் வசிக்கக்கூடிய இருப்பிடத்தை உறுதிசெய்யக்கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்க கூடிய வகையில் சமூகமளிக்க வேண்டும்..