திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அவர்கள் தங்களால் முடிந்த காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். அதில், கடந்த மாதம் தினமும் ரூ.5 கோடி முதல் ரூ.5.86 கோடி வரையில் காணிக்கை கிடைத்தன. மேலும், கடந்த மாதம் 22 நாளில் உண்டியல் வருமானமாக ரூ.100 கோடி கிடைத்தது. இந்நிலையில், கடந்த மாதம் முழுவதற்கும் ரூ.140 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் ரூ.140.7 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது. இது, புதிய சாதனையாக பதிவாகி உள்ளது. கடந்த மாதம் 10 லட்சத்து 79 ஆயிரத்து 900 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். ஆகஸ்டில் ரூ.1.7 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
* ஜூலையில் 23.40 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். 10.97 லட்சம் பேர் தலைமுடியை காணிக்கை செலுத்தினர். உண்டியல் மூலம் ரூ.139.33 கோடி காணிக்கை செலுத்தினர்.
* ஜூன் மாதத்தில் 23.23 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உண்டியலில் ரூ.123.74 கோடி செலுத்தினர்.
* மே மாதத்தில் ரூ.130 கோடி காணிக்கை செலுத்தினர்.
* மே மாதத்துக்கு முந்தைய 2 மாதங்களும் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது.