மொத்த ரஷ்யர்களுக்கும் கிடுக்குப்பிடி… ஐரோப்பிய நாடுகள் மும்முரம்


ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் – பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி எதிர்ப்பு

ரஷ்யாவை ஒட்டிய பல கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கும்

ரஷ்யா உடனான விசா ஒப்பந்தங்களை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ரஷ்ய குடிமக்கள் நுழைவது கடினமாகும் என கூறப்படுகிறது.
ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என உக்ரைனும் சில ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் கோரிக்கை முன்வைக்க, ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் இந்த நகர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மொத்த ரஷ்யர்களுக்கும் கிடுக்குப்பிடி... ஐரோப்பிய நாடுகள் மும்முரம் | Eu Toughens Visa To Russia

@bloomberg

பிப்ரவரியில் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரஷ்ய குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர்.
ஆனால், ரஷ்யாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு பதிலடி தரும் வகையில், ரஷ்யாவை ஒட்டிய பல கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசா தொடர்பான ஐரோப்பிய நாடுகளின் இந்த முடிவு உரிய பலனைத் தராது என குறிப்பிட்டுள்ள ரஷ்ய துணை வெளிவிவகார அமைச்சர், இதனால் ஐரோப்பிய நாடுகளே இழப்பை சந்திக்கும் என்றார்.

அதேவேளை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த முடிவை விமர்சித்துள்ளதுடன், அரை வேக்காடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவிக்கையில்,

ரஷ்யாவிலிருந்து எல்லைக் கடப்பதில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் விசா ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவை ஒட்டிய நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொத்த ரஷ்யர்களுக்கும் கிடுக்குப்பிடி... ஐரோப்பிய நாடுகள் மும்முரம் | Eu Toughens Visa To Russia

@reuters

ஆனால், சாதாரண அப்பாவி மக்கள், புடினின் போர் வெறிக்கு எதிரானவர்களுக்கு இந்த முடிவு பாதகமாக அமையலாம் எனவும் ஜோசப் பொரெல் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், ரஷ்யாவின் எல்லையில் உள்ள ஐந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் – பின்லாந்து, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா மற்றும் போலந்து ஆகியவை தற்காலிக தடைகள் அல்லது கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தன.

மேலும், ரஷ்யர்கள் பெரும்பாலும் நாட்டிற்குள் நுழைவதை சில வாரங்களுக்குள் தடை செய்ய இருப்பதாக எஸ்தோனியா கூறியுள்ளது.
இதனிடையே, ரஷ்யா மீதான கிடுக்குப்பிடி நடவடிக்கைகளை தங்களுக்கு சாதகமாக அந்த நாடு பயன்படுத்தவும், இதனால் எதிர்கால ரஷ்ய மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி கூட்டறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.