வால்பாறையில் உள்ள தனியார் தோட்டத்தில் புலிகள் மற்றும் கரடி நடமாட்டம் காணப்படுகிறது. கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் காட்டுயானை – புலி – கரடி – சிறுத்தை – கரு சிறுத்தை – புள்ளி மான் – வரையாடு மற்றும் அபூர்வகையான பறவைகள் உள்ளன.
வனப்பகுதி ஒட்டி தனியார் தேயிலை தோட்டம் பகுதிகள் நிறைந்தது என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வனத்துறையினர் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சவரங்காடு தேயிலை தோட்டத்தில் இரண்டு புலிகள் சென்றதை அப்பகுதி பொதுமக்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. மேலும் பகலில் புலிகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் ஒளிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”