சென்னை: தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக செல்வகுமார் என்பவரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சசிகுமார் (46), மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நடராஜன் (48) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். சசிகுமார் மீது சேலம், பவானி, வெள்ளித்திருப்பூர், கருமந்துறை காவல்நிலையங்களில் 7 மோசடி வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.