மன்னார் வீதித் தடையில் நேற்று (31) காலை 10.4 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் பெறுமதி ரூ. 150 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
தலைமன்னாரிலிருந்து வங்காலை பகுதிக்கு கெப் வண்டியில் போதைப்பொருளை கொண்டு செல்ல இருவரும் முயற்சித்த வேளையில் அவர்களை இராணுவத்தினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக இராணுவப் படையினர் குறித்த சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.