`2 மணி நேரமா ஆம்புலன்ஸ் வரல'… நிறைமாத கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் அழைத்து சென்ற அவலம்

மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தின் ரானேஹ் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு செவ்வாயன்று பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து கைலாஷ் அஹிர்வார் என்பவர் 108 அரசு ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்திருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகிலிருந்த சுகாதார மையத்திற்கு தனது மனைவியை அழைத்துச் சென்றார்.

அங்கு செவிலியர்கள், மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் மனம் உடைந்து போனார். இதையடுத்து ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தனது மனவியை அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சரியான சிகிச்சை அளிக்காத காரணத்தினால் அந்த பெண் டாமோ மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது மருத்துவர்களின் மேற்பார்வையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக அதிகாரி ஒருவர், “கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏன் வழங்கப்படவில்லை என்பது குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது, விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து , இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையை தொடங்கியது.

கடந்த வாரம், இதேபோன்ற சம்பவம் பிந்த் மாவட்டத்தில் பதிவாகியிருந்தது. இந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக 3 பத்திரிகையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் எப்ஐஆர் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.