32 ஆண்டுகளுக்கு முன் பக்கத்துக்கு நாட்டுக்கு மலையேற்றத்துக்குச் சென்ற நபர்: தற்போது கிடைத்துள்ள தகவல்


உருகும் பனிப்பாறைகள் பல இரகசியங்களை வெளிக்கொணர்ந்தவண்ணம் உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான விமானங்கள் முதல் காணாமல் போனவர்களின் உடல்கள் வரை பல விடயங்கள் கிடைத்துவருகின்றன.

32 ஆண்டுகளுக்கு முன், ஜேர்மனியிலிருந்து மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர் மாயமானார்.

தற்போது பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதையடுத்து பல ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான விமானங்கள் முதல், காணாமல் போனவர்களின் உடல்கள் வரை பல விடயங்கள் கிடைத்துவருகின்றன.

இந்நிலையில், 32 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன அந்த ஜேர்மானியரின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

32 ஆண்டுகளுக்கு முன் பக்கத்துக்கு நாட்டுக்கு மலையேற்றத்துக்குச் சென்ற நபர்: தற்போது கிடைத்துள்ள தகவல் | Body Of German Man Missing Guy

Picture alliance

சுவிட்சர்லாந்திலுள்ள Zermatt பகுதியில் மலையேற்றத்துக்குச் சென்றவர்கள் ஒரு உடல் கிடப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

அதிகாரிகள் DNA பரிசோதனை நடத்தியதில், அந்த உடல், 32 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன, ஜேர்மனியிலுள்ள Nürtingen நகரைச் சேர்ந்த 27 வயது நபருடையது என்பது தெரியவந்துள்ளது.

அவருடைய பெயர் Thomas Flamm. 1990ஆம் ஆண்டு, Valais பகுதியிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் தனியாக மலையேற்றத்துக்குச் சென்றிருந்தார் அவர்.

1990ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 29ஆம் திகதி தன் பாட்டிக்கும், ஆகத்து மாதம் 1ஆம் திகதி தன் தாய்க்கும் தனது சாகசங்கள் குறித்து கடிதங்கள் எழுதிய Thomasஇடமிருந்து அதற்குப் பிறகு தகவல் எதுவும் வராததால், பொலிசார் அவரைத் தேடும் முயற்சியில் இறங்கினார்கள்.

1990 இறுதிவரை தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், அதிகாரிகள் அவரைத் தேடும் முயற்சியைக் கைவிட்டார்கள்.

தலைசிறந்த மலையேற்றக்காரர் என அறியப்பட்ட Thomas என்ன ஆனார் என இத்தனை ஆண்டுகளாக தெரியாத நிலையில், 32 ஆண்டுகளுக்குப்பின் அவரது உடல் கிடைத்துள்ளது. அவர் எதிர்பாராத விபத்தில் பலியாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

பனியில் மறைந்திருந்த அவரது உடல், இப்போது பனி உருகிவருவதால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.