Freshworks கிரீஷ் மாத்ருபூதம் எடுத்த முக்கிய முடிவு..!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் Nasdaq-பட்டியலிடப்பட்ட SaaS நிறுவனமான ஃப்ரெஷ்வொர்க்ஸ், செப்டம்பர் 1, 2022 முதல் டெனிஸ் உட்சைட்-ஐ நிறுவனத்தின் தலைவராக நியமித்துள்ளது.

கிரீஷ் மாத்ருபூதம் சிஇஓ-வாக இருக்கும் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் நாஸ்டாக்-ல் பட்டியலிடப்பட்ட பின்பு நியமிக்கப்படும் முக்கிய அதிகாரியாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல் ஃப்ரெஷ்வொர்க்ஸ் தனது உலகளாவிய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இப்புதிய நியமனத்தைப் பிரத்தியேகமாகச் செய்துள்ளது.

சரி யார் இந்த டெனிஸ் உட்சைட்..? ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தில் என்ன செய்யப் போகிறார்..?

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல்.. கடந்த ஆண்டை விட அதிகம், ஜூலையை விட குறைவு!

ஃப்ரெஷ்வொர்க்ஸ்

ஃப்ரெஷ்வொர்க்ஸ்

ஃப்ரெஷ்வொர்க்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான கிரிஷ் மாத்ருபூதம்-யிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யப்பட உள்ளார் இந்நிறுவனத்தில் புதிதாக president-ஆக நியமிக்கப்பட்டு உள்ள டெனிஸ் உட்சைட்.

டெனிஸ் உட்சைட்

டெனிஸ் உட்சைட்

டெனிஸ் உட்சைட் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய வணிகச் செயல்பாடுகள் மற்றும் மூலோபாயத்தை முன்னெடுப்பதற்குப் பொறுப்பு வகிக்க உள்ளார். உட்சைட்-ம் இயக்குநர் குழுவிலும் இணைக்கப்பட்டு உள்ளதால் பல புதிய முடிவுகள் உலகளாவிய வர்த்தகத்திற்காக எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்பாசிபிள் ஃபுட்ஸ்

இம்பாசிபிள் ஃபுட்ஸ்

டெனிஸ் உட்சைட் இதற்கு முன்பு இம்பாசிபிள் ஃபுட்ஸ் என்னும் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார். அங்கு அவர் ஆப்ரேஷன்ஸ், உற்பத்தி, விநியோகச் சங்கிலி, விற்பனை, சந்தைப்படுத்தல், மனிதவள பிரிவு மற்றும் பிற செயல்பாடுகளை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் கவனித்துக்கொண்டார்.

டிராப்பாக்ஸ்
 

டிராப்பாக்ஸ்

அதற்கு முன், அவர் டிராப்பாக்ஸ்-ன் தலைமை இயக்க அதிகாரியாக இருந்தார், அங்கு அவர் நான்கு ஆண்டுகளாக வாடிக்கையாளர் எதிர்கொள்ளும் செயல்பாடுகள் மற்றும் வருவாய் ஈட்டுதல் ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார்.

கூகுள்

கூகுள்

டிராப்பாக்ஸ் நிறுவனத்திற்கு முன்பு வுட்சைட் 2003 முதல் 2012 வரை ஒன்பது ஆண்டுகளாகக் கூகுள் நிறுவனத்தில் பல்வேறு விற்பனை பிரிவு பதவிகளில் பணியாற்றியுள்ளார். இதில் முக்கியமாக Emerging Markets பிரிவின் நிர்வாக இயக்குனர், பிரிட்டன் விற்பனை பிரிவின் துணைத் தலைவர் பதவி, அமெரிக்க விற்பனை பிரிவுகளின் தலைவர் பதவிகள் மிகவும் முக்கியமானவை.

ஃப்ரெஷ்வொர்க்ஸ் பங்குகள்

ஃப்ரெஷ்வொர்க்ஸ் பங்குகள்

நாஸ்டாக்-ல் பட்டியலிடப்பட்டுள்ள ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவன பங்குகள் புதன்கிழமை வர்த்தகத்தில் 0.81 சதவீதம் உயர்ந்து 13.61 டாலராக இருந்தது. 2022ல் மட்டும் ஃப்ரெஷ்வொர்க்ஸ் பங்குகள் 46.88 சதவீதம் சரிந்துள்ளது. பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து ஃப்ரெஷ்வொர்க்ஸ் பங்குகள் சுமார் 70.89 சதவீதம் சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Freshworks appoints Dennis Woodside as President to lead global business operations and strategy

Nasdaq-listed Chennai SAAS company Freshworks appoints Dennis Woodside as President to lead global business operations and strategy. Ex-Dropbox, Ex-Google, Ex-Impossible Foods Dennis Woodside Reporting to Freshworks CEO and Founder Girish Mathrubootham.

Story first published: Thursday, September 1, 2022, 17:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.