நீலகிரி மாவட்டம், உதகை அருகே ஆற்றில் தாயை பிரிந்த ஒரு குட்டி யானை அடித்து வரப்பட்டது. இந்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், அதன் தாயிடம் சேர்ப்பதற்கு 3 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தினர்.
‘நமக்கு உதவி செய்யத்தான் வந்திருக்கிறார்கள்’ என்று, மனிதனை போல உணர்ந்த அந்த குட்டியானை, வனத்துறை அதிகாரிகள் கூடவே இருந்தது.
தாய் யானையை 3 நாள், 8 குழுக்களாக பிரிந்து தேடி வந்த வனத்துறை அதிகாரிகளின் உழைப்புக்கு பலன் கிடைத்தது.
சீகூர் வனப்பகுதியில் அந்த தாய் யானை தனியாக தவித்து நின்றது, உடனடியாக வனத்துறையினர் தாயையும், பிள்ளையும் ஒன்று சேர்த்தனர்.
பின்னர் தாய் யானை தன் குட்டியை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மூன்று நாளும் தமிழக வனத்துறை அதிகாரிகள் எடுத்த முயற்சிக்கு பொதுமக்களும், பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.