quiet quitting கலாச்சாரம் என்றால் என்ன என்பதை பார்க்கும் முன்பு, ஒரு சிறிய உதாரணத்தை தெரிந்து கொள்வோம். பள்ளியில் மாணவர்கள் நன்றாக படிப்பார்களா? இல்லையா? அவர்களின் திறமை என்ன? எப்படி அவர்களை சீரமைத்து நல்வழிப்படுத்துவது என்பதை மறந்து, நீ என்னவோ செய்? மார்க் வேண்டும் என மனப்பாடம் செய்தாவது அவர்களை மார்க் எடுக்க வைக்கின்றன சில பள்ளிகள்.
இன்னும் சில தரப்பு இவன் படிக்கவே மாட்டான். என்ன படித்தாலும் இதே மார்க் தான்.. என அடிக்கடி கூறுவதால், மாணவர்கள் மனதில் அது ஆழமாக பதிந்து விடுகின்றது. இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் என்ன தான் சொல்லிக் கொடுத்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதனை கவனத்தில் கொள்ள மாட்டார்கள். மொத்தத்தில் படிப்பிலேயே விரக்தி ஏற்பட்டு விடும். அவன் இறுதி வரையில் நன்றாக படிக்க கூடிய மாணவராகவே இருந்தாலும் சராசரி மதிப்பெண் தான் பெறுவான்.
ஐடி ஊழியர்கள் எடுக்கும் அதிரடி முடிவு.. அட்ரிஷன் அதிகரிக்க இது தான் காரணமா?
ஊழியர்களை விரட்டும் நிறுவனங்கள்
இந்த நிலை தான் இன்றைய காலத்தில் பல நிறுவனங்களிலும் நடக்கிறது. என்னதான் ஊழியர்கள் நன்றாக பணிபுரிந்தாலும், அதனால் நிறுவனங்கள் சமாதானம் அடைய மாட்டார்கள். அவர்கள் மீது கூடுதல் அழுத்தத்தினை கொடுப்பார்கள். டார்கெட் டார்கெட் என விரட்டுவார்கள். இதனால் ஒரு கட்டத்தில் நன்றாக பணிபுரியும் ஊழியர்கள் கூட, கடமைக்கு தங்கள் வேலையை செய்து விட்டு செல்வார்கள். அதில் ஒரு ஆர்வம் இருக்காது.
வெளியேற முடியாமல் போகலாம்
ஆரம்பத்தில் கொரோனா காலத்தில் இந்த அழுத்தமானது மிக அதிகமாக இருந்தன. இதனால் தான் அந்த காலகட்டத்தில் கிரேட் ரெசிக்னேஷன் இருந்தது. கொட்டிக் கிடக்கும் வேலைகளுக்கு மத்தியில் ஊழியர்கள் வெளியேறி வேறு வேலையை தேடிக் கொண்டாலும், சில ஊழியர்களால் சில குறிப்பிட்ட காரணிகளால் அது முடியாமல் போனது.
கடமைக்கு வேலை
ஏதோ ஒரு காரணமாக அவர்கள் வேறு வேலை தேடி செல்ல முடியாத நிலையில் இருப்பர். நிறுவனம் கொடுக்கும் இலக்கினையும் முடிக்க முடியாமல், வேலையையும் விட முடியாமல், கொடுக்கும் வேலையை அப்படியே கடமைக்கு செய்து முடிப்பர். அதாவது வாங்கும் சம்பளத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வர். ஆனால் கூடுதலாக வேலையை செய்ய மாட்டார்கள்.
பரிதாபம் தான்
இதனை இந்தியா ஏற்றுக் கொள்கிறதா என்றால் நிச்சயம் ஆமாம் என்று தான் கூற வேண்டும். இன்றும் பல நிறுவனங்களிலும் இந்த கலாச்சாரம் சத்தமே இல்லாமல் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. அதனை ஊழியர்களும் எதிர்கொண்டு தான் வருகின்றனர். ஊழியர்கள் பலரும் வேலையை ராஜினாமா செய்து விட்டு அடுத்த வேலைக்கு செல்கின்றனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தில் வெளியேற முடியாமல் தவிக்கும் ஊழியர்களின் நிலை அந்தோ பரிதாபம்.
வெளியேற்றம் தொடரும்
உதாரணத்திற்கு மாலை 6 மணிக்கு பணி நேரம் முடிகிறது எனில், ஒரு சிலர் வெளியேறி விடுவர். ஆனால் சிலர் மட்டும் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பர். இது பெரும்பாலும் அனைத்து துறையிலும் இருக்கும் ஒரு சூழல் தான். கிரேட் ரெசிக்னேஷன் முடிந்தாலும், இன்றும் இந்த அமைதியான வெளியேற்றம் என்னவோ தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
நிறுவனங்களுக்கு பாதிப்பில்லை
குறிப்பாக நிறுவனங்களின் கலாச்சாரத்தினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். உடல் ரீதீயாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவது அவர்கள் தான். ஆக இன்றும் இந்த quiet quittingஎன்பது தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. எனினும் இது குறித்து நிறுவனங்கள் கவலைப்படுவதில்லை. ஏனெனில் ஒருவர் அந்த இடத்தினை விட்டு வெளியேறினால், பலர் அந்த இடத்திற்கு வர காத்திருக்கின்றனர்.
போட்டி அதிகம்
தற்போது நிறுவனங்களின் பணியமர்த்தல் போக்கு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் மெட்ரோ நகரங்களில் உள்ள ஊழியர்கள் 2 – 3ம் தரப்பு நகர ஊழியர்களுடன் போட்டி போட தயாராக உள்ளனர். குறைந்த சம்பளத்தில் பணிபுரிய தயாராக உள்ளனர். ஆக இதனால் தங்கள் வேலையினை ராஜினாமா செய்யவும் முடியாமல், கொடுத்த வேலையினை முழுமையாக செய்ய முடியாமல் தவித்து வருபவர்களின் நிலை? கேள்விகுறியாகத் தான் உள்ளது.
என்ன செய்யலாம்?
இந்தியாவின் இதுபோன்ற அமைதியான விலகலை குறைப்பதற்கு, நீண்டகாலத்திற்கு அந்த குழுவுடன் இணைந்து பணியாற்ற முயற்சி செய்யலாம் அதற்காக முயற்சியினை அவர்கள் செய்யலாம். நீங்கள் சத்தமேயின்றி வெளியேறினாலும், நீங்கள் ஏன் வெளியேறினீர்கள் என்பது நிறுவனத்திற்கு தெரியாமலேயே போகலாம். ஆக அதனை புரியவைக்க முயற்சி செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவசரபடாதீர்கள்?
இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரம் சவாலான காலகட்டத்தில் உள்ளது. ஆக அவசரப்பட்டு வேலையை விட்டு செல்வது என்பது, உங்களை பொருளாதார பிரச்சனைக்கு தள்ளலாம். ஆக உங்கள் வேலை, வாழ்க்கை என இரண்டையும் பேலன்ஸ் செய்து அதனை கொண்டு செல்ல வேண்டும். இதனை அமையதியாக நிறுவனத்திற்கு புரிய வைக்கலாம். இது நீண்டகால நோக்கில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனால் நீங்கள் பயனடைவீர்கள்.
அதனை விடுத்து வெளியேறுவதோ? போர்கொடி தூக்குவதோ உங்களுக்கு தான் பிரச்சனையாக அமையலாம். உங்கள் கருத்து என்ன பதிவு செய்ங்க.
உலகம் முழுவதும் பரவி வரும் ‘Quiet Quitting’ கலாச்சாரம்.. இந்தியாவிலும் இருக்கிறதா..?!
Indian employees should clearly understand the culture of quiet quitting
Indian employees should clearly understand the culture of quiet quitting/அதென்ன quiet quitting கலச்சாரம்.. ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன.. உஷாரா இருங்க!