பாராளுமன்றம் இன்று முற்பகல் 9.30ற்குக் கூடவுள்ளது.
இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெறும்.
இதன்படி, ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (02) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இடம்பெற்று
அதன் பின்னர் குழு அமர்வு மற்றும் மூன்றாம் வாசிப்பின் பின்னர் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.