டெல்லி: இந்திய அரசியல் சட்ட முகவுரையில் இடம் பெற்றுள்ள மதசார்பின்மை, சோசலிசம் ஆகிய சொற்களை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2 வார்த்தைகளை நீக்கக் கோரி ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சேர்த்து சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.