எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்தும், திமுக அரசாங்கம் குறித்தும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். விருதுநகரில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜோந்திர பாலாஜி, திமுக அரசு ஒழுகாத எழுதாத பேனாவிற்கு 80 கோடி, வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பட்டை நாமம் அடிக்கும் அரசு என்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்துள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு அருமையான தீர்ப்பு, வரவேற்க வேண்டிய தீர்ப்பு என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, அஇஅதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கு இன்று தீர்ப்புக்காக நீதி அரசர்கள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் முன்பாக தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்கள்.
விருதுநகரில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘ஒழுகாத எழுதாத பேனாவிற்கு 80 கோடி வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பட்டை நாமம் அடிக்கும் திமுக அரசு. உயர்நீதிமன்ற தீர்ப்பு அருமையான தீர்ப்பு, வரவேற்க வேண்டிய தீர்ப்பு, திமுக அரசு போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கிறது.’ என்று கூறினார்.
‘பொய்யை சொல்லி சொல்லி ஆட்சிக்கு வந்த ஆட்சி திமுக ஆட்சி.’ என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான் ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கே கே பாண்டி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும் விடியா திமுக அரசு என அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.