டிஜிட்டல் யுகத்தில் தினம்தோறும் புது புது செயலிகள் பிறப்பது போல் அவற்றோடு சேர்த்து இணைய வழி குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. வாட்சப் போன்ற முன்னணி நிறுவனங்கள் இது போன்ற இணைய வழி குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறுகட்ட பாதுகாப்பு நாவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் தொடர்ந்து இது போன்ற பொது தளங்களில் இணைய வழி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொன்டே இருக்கின்றன.
பொதுவாக வாட்சப் தளத்தில் இது போன்று வாட்சப்பின் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டாலோ அல்லது பிறரை ஏதாவது ஒரு வகையில் பாலியில் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக என சீண்டினால் அவர்களை பற்றி புகாரளிக்க முடியும்.
wa,@support.whatsapp.com
என்ற மெயில் ஐடிக்கு உங்களின் புகாரை தெரிவிக்கலாம். அத்தோடு அது கேக்கும் ஒரு சில தகவல்களை இணைக்க வேண்டும். பின் உங்களது புகார் நிபுணர் குழுவால் ஆராயப்பட்டு பின் குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
அப்படி கடந்த ஜூன் மாதம் மட்டும் மூன்று லட்சம் வாட்சப் பயனர்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் ஜூலை மாதத்தில் முடக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி ஜூலை மாதத்தில் 23 லட்சம் இந்திய கணக்குகளுக்கும் மேல் முடக்கியுள்ளதாக வாட்சப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இவர்களெல்லாம் வாட்சப்பின் சட்ட திட்டங்களுக்கு எதிராக நடந்து கொள்வது அல்லது பிறருக்கு ஏதோ ஒரு வகையில் தொல்லை கொடுப்பது போல் நடந்து கொண்டவர்கள் என்ற புகாரின் அடிப்படையில் நடடிக்கை எடுக்கப்பட்டவர்கள்.
மேலே கூறப்பட்டுள்ள மெயில் மூலம் புகார் தெரிவிக்கும்போது அந்த நபரின் இறுதி 5 வாட்சப் மெசேஜின் ஸ்கிரீன்சாட் கேக்க படும். அதை வைத்தே நிபுணர் குழு ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து விடும்.
மறுபுறம் ஒரே மாதத்தில் இவ்வளவு இணைய குற்றங்கள் அதிகரித்திருப்பது இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய வாட்சப்பின் செய்தி தொடர்பாளர் பயனர்களின் புகார்களை அடுத்து ஜூலை மாதம் 23லட்சம் இணைய வழி குற்றத்தில் ஈடுபட்ட பயனர்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாக கூறியுள்ளார்.