ரகசிய குறியீடு கேப்டனுக்கு அளிக்கப்பட்ட அறிவுரை மட்டுமே என இலங்கை பயிற்சியாளர் விளக்கம்
இங்கிலாந்து பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட் இருந்தபோது இதேபோன்று ரகசிய குறியீடுகளை அனுப்பியிருந்தார்
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வீரர்களுக்கு உடைமாற்று அறையில் இருந்து ரகசிய குறியீடு காட்டப்பட்டதற்கு பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரின் நேற்றையப் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற சூழலில், இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.
இலங்கை அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் செய்த விடயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கிறிஸ் சில்வர்வுட் ‘2D, D5’ என்ற சில ரகசிய குறியீடுகளை உடைமாற்று அறையில் இருந்து வீரர்களின் பார்வையில் படும்படி வைத்திருந்தார்.
இதுகுறித்து விவாதம் எழுந்த நிலையில் சில்வர்வுட் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘இதெல்லாம் ஒன்றும் ராக்கெட் அறிவியல் கிடையாது. மற்ற அணிகளும் இதையே தான் செய்கின்றன. களத்தில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி செயல்பட முடியும் என்பது கேப்டனுக்கு அளிக்கப்பட்ட அறிவுரை மட்டுமே. கேப்டனாக எப்படி செயல்படுவது என்று கூறுவது இல்லை’ என தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு இங்கிலாந்து பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட் இருந்தபோது இதேபோன்று ரகசிய குறியீடுகளை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
SLC