அதிமுகவில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் இரட்டை தலைமை தொடர்பாக சிக்கல் எழுந்த போது, எடப்பாடி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்நிலையில் இந்த பொதுக்குழுவில் பன்னீர் செல்வம் மற்றும் அவர்களை சாந்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நடைபெற்ற பொதுக்குழுவிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு நடைபெற்றது செல்லாது என்றும் ஜீன் 23-க்கு முன்பிருந்த நிலை நீடிக்க வேண்டும் என்று தீர்பளித்தார்.
இந்நிலையில் இதற்கு எதிராக இபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கானது, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இபிஎஸ் நடத்திய பொதுக்குழு செல்லும் என்றும் தனிநீதிபதியின் உத்தரவை ரத்தி செய்து உத்தரவிட்டனர்.