உதயநிதி திடீர் முடிவு; அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்!

தமிழக முதல்வர்

மகன் உதயநிதி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். மேலும், சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாககவும் பணியாற்றி வருகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் என்பதாலோ.. என்னவோ? கடந்த சில மாதங்களாகவே

பெயர் தமிழக அரசியலில் ஓயாமல் ஒலிப்பதை கேட்க முடிகிறது.

இதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்து அரசியல் களத்தை பரபரப்பாக்கியது தான்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு உள்பட மூத்த அமைச்சர்கள் கூட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்தை வரிசைக் கட்டி வழிமொழிந்தபடி வந்தனர்.

இதனால் உதயநிதி ஸ்டாலின் எந்த நேரத்திலும் அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் நிலவி வருகிறது. அதே சமயம்

மேலிடமோ உதயநிதி ஸ்டாலின் குறித்து வெளியாகும் தகவல்களுக்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறது.

இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் செய்தியாளர்கள் மடக்கி அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதா? என, கிடுகிப்பிடி கேள்வி எழுப்பியபடி உள்ளனர்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், ‘தலைமை முடிவு எடுக்கும்’ என, மழுப்பலாகவே பதில் அளித்து வருகிறார். இதன் மூலம் அமைச்சர் பதவி வழங்கப்படுவது உறுதி தான் என, பேசப்பட்டாலும் இன்னமும் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படாதது தான் திமுகவினர் மத்தியில், கவலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கட்டம் சரியில்லாத காரணத்தினாலேயே அமைச்சர் பதவி வழங்குவதில் இழுபறி நீடிப்பதாகவும், அதை நிவர்த்தி செய்வதற்கு குடும்பத்தினர் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம் அமைச்சர் பதவியை ஏற்றுவிட்டால், நட்புகளுடன் சேர்ந்து ஊர் சுற்ற முடியாது. எங்கு போனாலும் கண் கொத்தி பாம்பாக கேமராக்கள் கவனிக்கும் என உடன் இருக்கும் நெருங்கிய நண்பர்கள் ஏற்றி விடுவதால் அமைச்சர் பதவியே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உடன் பிறப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் காதில் ஓதுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.