இந்திய டெக் துறையில் இப்போது ஹாட் டாப்பிக் ஆக இருப்பது Moonlighting தான், ஒருபக்கம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரிய அளவில் இதை ஆதரித்தாலும் வழக்கம் போல் புதிய மாற்றங்களை விரும்பாத நாட்டின் முன்னணி மற்றும் பெரிய ஐடி சேவை நிறுவனங்கள் இதைக் கடுமையாக எதிர்த்து வருகிறது.
கொரோனா காலத்தில் ஐடி சேவை சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் இருந்த காரணத்தால் நிறுவனங்களைக் காட்டிலும் ப்ரீலான்ஸ் மற்றும் கான்டிராக்ட் முறையில் வரும் வேலைகள், பகுதி நேர வாய்ப்புகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதைப் பெரிய அளவில் பயன்படுத்தி அதிகளவிலான பணத்தைத் திறமையான டெக் ஊழியர்கள் சம்பாதித்தனர். இது ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில் நாட்டின் பெரும் ஐடி சேவை நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்து வருகிறது.
18 மணி நேரம் வேலையா.. ரத்தன் டாடாவின் முன்னாள் ஊழியரின் கருத்தால் ஷாக்கான ஊழியர்கள்..!
Moonlighting கான்செப்ட்
இத்தகைய Moonlighting கான்செப்ட் உலக நாடுகளில் பெரியளவில் பிரபலமாக இருந்தாலும் இந்தியாவில் ஸ்விக்கி நிறுவனம் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக Moonlighting-ஐ தனது நிறுவன கொள்கையாக மாற்றியது. இது டெக் ஊழியர்கள் மட்டும் அல்லாமல் அனைத்துத் தரப்பு ஊழியர்களும் பாராட்டி வந்தனர்.
டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்
ஆனால் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல் போன்ற பெரு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்து வருகிறது. அதிலும் முக்கியமாக விப்ரோ தலைவரும் நாஸ்காம் அமைப்பின் முன்னாள் தலைவருமான ரிஷாத் ப்ரேம்ஜி Moonlighting என்பது Cheating வேலை எனக் கடுமையாக விமர்சனம் செய்து டிவிட் செய்திருந்தார்.
ஊழியர்கள்
நீண்ட காலமாகவே நிறுவனங்கள் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கும் காரணத்தால் ஊழியர்கள் நிறுவனத்துடைய சொத்து என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நிறுவனங்கள் ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட சேவையை, குறிப்பிட்ட நேரத்திற்கு அளிக்கப்படுகிறது. ஆனால் Moonlighting வேலை நேரத்திற்கு அப்பால் செய்யப்படுபவை.
குறைவான சம்பளம்
பல நேரத்தில், பல துறையில் ஊழியர்களுக்குச் சக நிறுவனங்களைக் காட்டிலும் மிகவும் குறைவான சம்பளம் அளிக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் Moonlighting என்பது ஜாக்பாட் போன்றது, ஆனால் ஐடி துறையில் அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படுகிறதே பிறகு ஏன் சைட் வருமானம் பார்க்க வேண்டும்.
பணம் மட்டுமே இலக்கு
எல்லா நேரத்திலும் பணம் மட்டுமே இலக்காக இருக்காது, பயிற்சி, துறை மீதான ஆர்வம், புதிதாக அனுபவம் பெற வேண்டும், ஒரு ப்ராஜெக்ட்-ஐ எப்படிக் கையாள வேண்டும் எனக் காரணத்திற்காக ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் நிரந்தரப் பணியைத் தாண்டி ப்ரீலான்சர் அல்லது கான்டிராக்ட் பணிகளைச் செய்து வருகின்றனர்.
ஐடி நிறுவனங்கள்
பெரும் ஐடி நிறுவனங்கள் இந்த Moonlighting கான்செப்ட்-ஐ எதிர்ப்பது குறித்து நீங்க என்ன நினைக்கிறீர்கள் மறக்காம கமெண்ட் பண்ணுங்க. இதேபோல் இந்தியாவில் Moonlighting கான்செப்ட் அனைத்து துறையிலும் கொண்டு வர வேண்டுமா என்பதையும் மறக்காமல் சொல்லுங்க.
Big IT companies TCS, wipro, infosys, HCL are opposing moonlighting, But why..?
Big IT companies TCS, wipro, infosys, HCL are opposing moonlighting, But why..? ஐடி ஊழியர்களுக்கு எதிராக ஒன்று சேரும் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்..!