கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா போதையில் சிறுவன் ஒருவன் கஞ்சா போதையில் பேருந்து நிலையத்தில் முட்டி மோதிய காட்சி ட்ரெண்டாகி வருகிறது.
கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் போதையில் பேருந்து நிலையத்தில் முட்டி மோதிய காட்சி ட்ரெண்டாகி வருகிறது
தமிழகத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
தமிழக காவல்துறை சிறப்பு நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்களை கடத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
போதைப்பொருள் பயன்பாடு
போதை பொருள்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ள காவல்துறை, தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அரசு ஒருபக்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் இன்னொரு பக்கம் போதைப்பொருட்கள் பயன்பாடும் இருந்து கொண்டுதான் உள்ளது. முன்பெல்லாம் 25 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தான் கஞ்சா போதைப்பாக்குகள் போன்றவற்றை பயன்படுத்தி வந்தனர்.
சிறுவர்களும் விதிவிலக்கல்ல…
ஆனால் தற்போதைய காலத்தில் சிறுவர்களும் இத்தகைய பழக்கத்து அடிமையாகி உள்ளனர் என்பது வேதனை அளிக்கும் விஷமாகவே பார்க்கப்படுகிறது. போதைப்பொருட்களால் ஆபத்து என்று பலரும் கூறி வந்தாலும்… ”யார் என்ன சொன்னால் என்ன.. நாங்க அப்படித்தான்” என்று கூறும் அளவுக்கு சிறுவன ஒருவன் கஞ்சா போதையில் பஸ் நிலையத்தில் தள்ளாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
போலீசுக்கு தகவல்
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தள்ளாடியபடி சுற்றிகொண்டு இருந்தான். சிறுவன் தடுமாறி செல்வதை கண்ட அங்கிருந்த மக்கள் அவனுக்கு என்ன ஆயிற்று என்று அருகில் சென்று பார்த்தனர். அப்போது சிறுவன் அடிக்கடி வாயில் இருந்து எச்சிலை துப்பிக்கொண்டு இருந்தான். இதனால், கஞ்சா போதையில் சுற்றித்திரிகிறானோ? என்ற சந்தேகம் அங்கிருந்தவர்களுக்கு ஏற்பட்டது. இதையடுத்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
அதன்பேரில் அங்கு வந்த போலீசார் சிறுவனை அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படிக்கும் வயதில் இப்படி கஞ்சா பயன்படுத்தி இளைய சமுதாயம் சீரழிகிறதே என மனம் வெதும்பிய சமூக ஆர்வலர்கள், சிறுவனுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது.. கஞ்சா பொட்டலங்கள் நகரத்தில் விற்பவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாட்டை போலீசார் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதிர்ச்சி
இந்த வீடியோ பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16-வயது சிறுவன் கஞ்சா போதையில் தன்னை மறந்து பேருந்து நிலையத்தில் தள்ளாடி சென்ற சம்பம் அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.