சமூக சேவகர் டீஸ்டா செதல்வாட்டிற்கு ஜாமின்| Dinamalar

புதுடில்லி: கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பொய் வழக்குகள் தொடர்ந்ததாக சமூக சேவகர் டீஸ்டா செதல்வாட் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை செசன்ஸ் மற்றும் குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இடைக்கால ஜாமின் வழங்கியது. பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், வழக்கு நடக்கும் நீதிமன்ற வரம்பிற்குள் அவர் தங்க வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.