சரத்குமார், பார்த்திபன் : பழுவேட்டரையர்கள் தோற்றம் வெளியீடு

தஞ்சை மண்ணில் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அந்த ஆட்சிக்கு பாதுகாவலர்களாகவும், விசுவாசமிக்க நண்பர்களாகவும் இருந்தவர்கள் பெரிய பழுவேட்டரையரும், சின்ன பழுவேட்டரையரும். இவர்கள் பழுவூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர்கள். சுந்தர சோழரின் ஆட்சி காலத்தில் பழுவூர்ச் சகோதரர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள். காலாந்தகக் கண்டர் சின்ன பழுவேட்டரையர் எனவும், கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையர் எனவும் அழைக்கப்ட்டார்கள்.

பெரிய பழுவேட்டரையர் 24 யுத்தங்களில் பங்கெடுத்து 64 விழுப்புண்கள் பெற்ற வீரராகவும் இருந்தார். அதே நேரத்தில் வயதான காலத்தில், நந்தினி எனும் இளம் பெண்ணை திருமணம் செய்து அவள் காதலுக்காகவும் உருகினார். ஆனால் நந்தினி ஆட்சியை பிடிக்கத்தான் தன்னை மணந்தாள் என்பதை அறிந்த பெரிய பழுவேட்டரையர் அவளை விரட்டி அடித்து விட்டு தன் வாளினாலேயே மரணத்தை தழுவினார். அண்ணனுக்கு எப்போதும் துணை நின்றார் சின்ன பழுவேட்டைரையர்.

பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற இந்த இரு முக்கியமான கேரக்டர்களில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், இளைய பழுவேட்டரையராக பார்த்திபனும் நடித்திருக்கிறார்கள். அவர்களின் தோற்றம் நேற்று வெளியிடப்பட்டு வைரலாக பரவியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.