சர்வதேச நாணய நிதியத்தின் கடன் எவ்வாறு கிடைக்கும்…! எதற்காக பயன்படுத்தலாம்.. வெளியான முக்கிய தகவல்


அந்நியச் செலாவணி கையிருப்பு நெருக்கடிக்கு நிவாரணமாக சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி கிடைக்கப் பெற்றுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்த தொகையில் எரிபொருள், எரிவாயு அல்லது உணவு மற்றும் பானங்களை இறக்குமதி செய்ய முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

நிதியத்தின் கடன் உதவி

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் எவ்வாறு கிடைக்கும்...! எதற்காக பயன்படுத்தலாம்.. வெளியான முக்கிய தகவல் | Sri Lanka Economic Crisis Imf Help To Sri Lanka

சர்வதேச நாணய நிதியத்தில் பெறும் கடன் தொகைஅல்லது நிதியத்துடன் இணங்கும் நிபந்தனைகள் கொண்டு நம் நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது.

இலங்கையில் உள்ள நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு இந்த பணம் போதுமானதல்ல. நம் நாட்டில் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்த்திருந்தங்கள் மற்றும் அந்நியச் செலாவணிகளை ஈட்டுவதன் மூலமே மீண்டு வர முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தில் பெறும் கடன் மூலம் இலங்கையின் நெருக்கடியை தீர்க்க முடியாது என்பதே எனது கருத்தாகும்.

நெருக்கடிக்கு தீர்வு

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் எவ்வாறு கிடைக்கும்...! எதற்காக பயன்படுத்தலாம்.. வெளியான முக்கிய தகவல் | Sri Lanka Economic Crisis Imf Help To Sri Lanka

சர்வதேச நாணய நிதியம் தற்போது இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதியை வழங்குவதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளது.

அத்துடன் 48 மாத அடிப்படையிலான கடன் என்பது ஒரே நேரத்தில் முழு தொகையையும் வழங்குவது அல்ல. 48 மாதற்களுக்குள்ளே இந்த கடன் தொகை வழங்கப்படும்.

3 மாதங்களுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற அளவில் வழங்கப்படும். அதன் பின்னர் 48 மாத காலப்பகுதிக்குள் பகுதி பகுதியாக வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.