சவாலான நேரத்த்திலும் FPIகள் அதிகம் வாங்கிய 5 பங்குகள்.. வேண்டாம் என விற்ற 5 பங்குகள் எது தெரியுமா?

சர்வதேச அளவில் நிலவி வரும் பணவீக்கத்தின் மத்தியில் பல நாடுகளில் பணவீக்கம் என்பது தாண்டவமாடி வருகின்றது. இதற்கிடையில் பங்கு சந்தையிலும் ஏற்ற இறக்கம் என்பது மிக அதிகமாக உள்ளது.

தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பணவீக்கத்தினை கருத்தில் கொண்டு, வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. எனினும் வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து முதலீடுகள் என்பது தொடர்ந்து வெளியேறி வருகின்றது.

இதன் காரணமாக இந்திய சந்தையானது மொத்தமாக பார்க்கும்போது சரிவிலேயே காணப்படுகின்றது. ஆனால் இப்படி சவாலான நிலையில், அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ள 5 பங்குகள் என்னென்ன தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.

டெக் துறை மட்டுமல்ல..இனி இதிலும் கர்நாடகா தான் பெஸ்ட்.. பில்லியன் முதலீடு.. 60,000 பேருக்கு வேலை

FPI முதலீடு அதிகரிப்பு

FPI முதலீடு அதிகரிப்பு

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் அன்னிய முதலீடுகள் வெளியேறினாலும், பிற்பாதியில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது என ஐசிஐசிஐ செக்யூரிட்டி தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் சந்தையில் பல சவாலான நிலை இருந்த போதிலும், சிப்லா, ஐடிசி, ஹெச் ஏ எல், யுபிஎல், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகளில் FPI முதலீடானது அதிகரித்துள்ளது. அதேசமயம் டெக் மகேந்திரா, ஹெச் டி எஃப் சி, ஹெச் டி எஃப் சி வங்கி, எல் & டி இன்ஃபோடெக் மற்றும் மைண்ட் ட்ரீ உள்ளிட்ட பங்குகளில் FPI முதலீடானது குறைந்துள்ளது.

 

 

முதலீடுகள் அதிகரிக்கும்

முதலீடுகள் அதிகரிக்கும்

FPI முதலீடுகள் வெளியேற்றத்தில் முதல் பாதியில் நிதித்துறை, ஐடி துறை மற்றும் ஆயில் & கேஸ், சிமெண்ட் பங்குகளில் இருந்து அதிகளவிலான முதலீடுகள் வெளியேறியுள்ளன. எனினும் இரண்டாம் பாதியில் உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மேம்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நுகர்வோர் சம்பந்தமான பங்குகள், நிதித்துறை, தொழிற்துறை மற்றும் எஃப் எம் சி ஜி, டெலிகாம் துறைகளின் வளர்ச்சி மேம்படலாம் என்ற கணிப்பு உள்ள நிலையில், இந்த துறைகளில் அன்னிய முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

உள்நாட்டி முதலீடு
 

உள்நாட்டி முதலீடு

எனினும் இன்று சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் ஐடி துறை, ஆயில் & கேஸ், மெட்டல்ஸ் உள்ளிட்ட துறைகள் அழுத்தத்திலேயே காணப்படுகின்றன.

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சேர்த்து 30 பில்லியன் டாலர் முதலீடானது அதிகரித்துள்ளது. இதில் மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடானது 16.8 பில்லியன் டாலராகும். இது நிதித்துறை, ஐடி, நுகர்வோர், ஆயில் & கேஸ் ஆட்டோ உள்ளிட்ட துறைகளில் அதிகம் இருந்தது.

 

 

முதலீடுகள் வெளியேறலாம்

முதலீடுகள் வெளியேறலாம்

வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் மீண்டும் அதிகரிக்கப்படலாம். இதன் காரணமாக இந்திய பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறலாம். இதனால் இந்திய சந்தையில் அழுத்தம் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த காலக்கட்டத்தில் பெரியளவிலான முதலீடுகள் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What are the 5 stocks bought by FPIs? What are the 5 stocks sold in Indian market?

What are the 5 stocks bought by FPIs? What are the 5 stocks sold in Indian market?/சவாலான நேரத்த்திலும் FPIகள் அதிகம் வாங்கிய 5 பங்குகள்.. வேண்டாம் என விற்ற 5 பங்குகள் எது தெரியுமா?

Story first published: Friday, September 2, 2022, 17:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.