”செப்டம்பர் இறுதி வரையில் மட்டுமே இலவச பூஸ்டர் கொரோனா தடுப்பூசி” – அமைச்சர் மா.சு.,

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் மாதத்தின் இறுதிவரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும் என்றும் அதன் பிறகு அரசு நிர்ணயித்துள்ள 360 ரூபாய் கொடுத்து தனியார் மருத்துவமனையிலேயே செலுத்தி கொள்ளலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் மையத்தை திறந்து வைத்த அவர், மார்பக புற்றுநோயால் ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட பின்னர்  நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார் 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.