அமெரிக்க அதிபர் ஜோ பிடன், மனு அஸ்தானா மற்றும் மது பெரிவால் ஆகிய இரண்டு இந்திய-அமெரிக்க நிர்வாகிகளைத் தேசிய உள்கட்டமைப்பு ஆலோசனைக் குழுவிற்கு நியமித்துள்ளார்.
ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் ஏற்கனவே 130க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்களை முக்கியப் பதவிகளில் நியமித்துள்ளார். அமெரிக்க நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதமாக மட்டுமே இருக்கும் இந்திய சமூகத்தில் இருந்து அதிபர் நிர்வாகக் குழுவில் 130 பேர் என்றால் வியக்கவைக்கும் எண்ணிக்கை தான்.
இந்நிலையில் தற்போது புதிதாக இருவரை நியமித்துள்ளது ஜோ பைடன் நிர்வாகம்.
சீனா-வில் இப்படியொரு பிரச்சனையா.. இளம் தலைமுறையினரின் திட்டம் என்ன..?
NIAC குழு
தேசிய உள்கட்டமைப்பு ஆலோசனைக் கவுன்சிலில் (NIAC) உள்ள நிர்வாகிகள், பிசிக்கல் மற்றும் சைபர் அபாயங்களைக் குறைப்பது மற்றும் நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புத் துறைகளின் பாதுகாப்பு மற்றும் பின்னடைவை மேம்படுத்துவது எப்படி என்று வெள்ளை மாளிகைக்கு வழிகாட்டுகிறார்கள்.
26 நபர்கள்
NIAC குழுவிற்கு அறிவிக்கப்பட்ட 26 நபர்கள் வங்கி மற்றும் நிதி, போக்குவரத்து, எரிசக்தி, நீர், அணைகள், பாதுகாப்பு, தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரச் சேவைகள், உணவு மற்றும் விவசாயம், அரசு வசதிகள், அவசர சேவைகள் மற்றும் உயர் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆழ்ந்த அனுபவமுள்ள மூத்த நிர்வாகிகளாக உள்ளனர்.
மனு அஸ்தானா
உலகின் மிகப்பெரிய மின்சாரச் சந்தைகளில் ஒன்றான வட அமெரிக்காவின் மிகப்பெரிய மின் கட்டத்தை PJM இன் CEO மற்றும் தலைவராக இருக்கிறார் மனு அஸ்தானா.
அவரது தலைமையின் கீழ் PJM நிறுவனம் நம்பகமான மின்சாரச் சேவையைப் பராமரிக்கும் அதே வேளையில் தூய்மையான, திறமையான கட்டத்திற்கு மாறுவதில் கிரிட் ஆப்ரேட்டரின் பங்கை வரையறுப்பதற்கான தெளிவான பாதையை நிறுவப்பட்டு உள்ளது இவர் குறித்து வெள்ளை மாளிகை கூறியது.
மது பெரிவால்
இரண்டாவதாக இக்குழுவில் நியமிக்கப்பட்டு உள்ள பெற்ற மது பெரிவால் புதுமையான அவசரநிலை மேலாண்மையின் (Innovative Emergency Management (IEM)) நிறுவனர் ஆவார். இந்த நிறுவனம் பேரிடர் தயார்நிலை, உள்நாட்டுப் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசு நிறுவனங்களுக்கு உதவும் நிறுவனம். இது அமெரிக்காவில் பெண் தலைமையிலான மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அவசரக்கால மேலாண்மை நிறுவனமாகும்.
இந்திய-அமெரிக்கர்கள்
அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய உள்கட்டமைப்பு ஆலோசனைக் குழுவில் தற்போது இந்திய-அமெரிக்கர்களான மனு அஸ்தானா மற்றும் மது பெரிவால் ஆகியோர் இரண்டு நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
2 Indian-Americans Manu Asthana and Madhu Beriwal appointed in joe Biden NIAC council
2 Indian-Americans Manu Asthana and Madhu Beriwal appointed in joe Biden NIAC council ஜோ பிடன் நிர்வாகக் குழுவில் மீண்டும் 2 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்..!