டில்லி விமான நிலையத்தில் கூச்சல் குழப்பம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஜெர்மனியில் சம்பள உயர்வு கோரி லுப்தான்சா விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த நிறுவனத்தின் விமான சேவைகள் உலகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதனால் , டில்லியில் இருந்து ஜெர்மனி செல்லவிருந்த பயணிகள் கட்டணத்தை திருப்பி கேட்டு போராடியதால், விமான நிலையத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ஜெர்மனியின் விமான நிறுவனமான லுப்தான்சாவில் பணியாற்றும் விமானிகள் சம்பள உயர்வு கேட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பல நாடுகளில் இருந்து ஜெர்மனி செல்பவர்கள் , அங்கிருந்து வெளிநாடு செல்பவர்கள் என 1,30,000 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று டில்லியில் இருந்து ஜெர்மனி செல்வதற்காக அந்த நிறுவன விமானத்தில் 700 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அதில், பெரும்பாலானவர்கள் மாணவர்கள். ஆவார்கள். ஆனால், முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் சிலர் மற்றும் அவர்களின் உறவினர்கள் நீதி வழங்க வேண்டும் எனக்கோரியும், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது பணத்தை திரும்பி செலுத்த வேண்டும் எனக்கூறி கோஷம் எழுப்பினர். மேலும், பயணிகள் முனையத்திற்குள் அங்கும் இங்கும் சென்றதால், பாதுகாப்பும் கேள்விக்குறியானது. தொடர்ந்து சிஐஎஸ்எப் வீரர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

latest tamil news

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் பயணிகளின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என தெரியவந்தது. முன்னறிவிப்பின்றி விமானம் ரத்து செய்ததால், அவர்கள் கோபமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேசி சிஐஎஸ்எப் மற்றும் அதிகாரிகள், அவர்களை கலைந்து போக செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க விமான நிறுவன ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.