டீஸ்டா செடல்வாடுக்கு இடைக்கால ஜாமீன்: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இந்து-முஸ்லிம் கலவரம் குறித்த 2002ஆம் ஆண்டு வழக்குக்காக போலி ஆவணங்கள் தயாரித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட டீஸ்டா செடல்வாட் இரண்டு மாதங்களுக்கு பிறகு இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ளார். சமூக செயற்பாட்டாளரும், பிரதமர் நரேந்திர மோடியின் கடுமையான விமர்சகருமான டீஸ்டா செடல்வாட் மீதான வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 2, வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.

ஜூன் 25 அன்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து டீஸ்டா செடல்வாட் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து வந்த காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார், பின்னர் அவர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

“அவர் ஒரு பெண் மற்றும் மற்ற குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி, அவர்களின் தகுதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறது” என்று தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தனது உத்தரவில் கூறினார்.

செடல்வாட்டின் ஜாமீன் மனு மீது மாநில நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் நீடிக்கும்.

குஜராத் உயர் நீதிமன்றம், டீஸ்டா செடல்வாட்டின் ஜாமீன் மனுவை சுயாதீனமாகவும், இந்த நீதிமன்றத்தின் எந்த அவதானிப்புகளாலும் பாதிக்கப்படாமல் தீர்மானிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும், நிலுவையில் உள்ள விசாரணையில் டீஸ்டா செடல்வாட் முழு ஒத்துழைப்பை வழங்குவார் என்றும், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.