இந்தியாவில் ஒரு காலத்தில் நோக்கியா என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சிறுவர்கள் விளையாடும் பொம்மை போனில் கூட நோக்கியா என்றுதான் எழுதியிருக்கும். அந்தளவு மொபைல் போன் உற்பத்தியில் நோக்கியா முக்கியமான நிறுவனமாக இருந்து வந்தது.
ஆனால் ஸ்மார்ட் போன் வளர்ச்சிக்கு பின் அதிகமான நிறுவனங்கள் பெருகி போட்டியில் பின்தங்கி போனது நோக்கியா. ஆனால் தற்போது மீண்டும் அந்த இடத்தை பிடிப்பதற்காக பல விதமான ஸ்மார்ட் போன்களை ஸ்மார்ட்டாக தயாரித்து சந்தையில் விற்பனைக்கு விட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போதுள்ள ட்ரெண்டுக்கு ஏற்றவாறு சுற்றுசூழல் சார்ந்து ஸ்மார்ட் போன்களை தயாரித்துள்ளது. மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்தி இயற்கைக்கு பாதகமில்லாத ஸ்மார்ட் போன்களை தயாரித்துள்ளனர். இதில் பியூட்டி என்னவென்றால் அந்த மொபைல்களுக்கு மூன்று வருட ஹார்டுவேர் மற்றும் சாஃப்டுவேர் வாராண்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி சமீபத்தில் வெளியாகியுள்ள நோக்கியா G60 5G , நோக்கியா C31 , நோக்கியா X30 5G ஆகிய மாடல்களின் சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.
நோக்கியா X30 5G
இதன் மேற்கட்டமைப்பு 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் 65 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்டது.
ஸ்னாப்ட்ரகன் 695 soC ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.8GB ரேம் மற்றும் 128GB ரோம் மற்றும் 8GB ரேம் மற்றும் 256GB ரோம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.4200mAh பேட்டரி திறனுடன் 33W வேகமான சார்ஜிங் வசதி 6.43 இன்ச் முழு HD + AMOLED டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.50MP + 13MP பின்பக்க கேமரா வசதி மற்றும் 16MP முன்பக்க கேமரா வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.கிளவ்டி ப்ளூ மற்றும் ஐஸ் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.
நோக்கியா G60 5G
இதன் மேற்கட்டமைப்பு 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்டது.
ஸ்னாப்ட்ரகன் 695 soC ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.6GB ரேம் மற்றும் 128GB ரோம் 4500mAh பேட்டரி திறனுடன் 20W வேகமான சார்ஜிங் வசதி 6.58 இன்ச் முழு HD (FHD) டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது 120Hz ரெஃப்ரெஷிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.50MP + 5MP + 2MP பின்பக்க கேமரா வசதி மற்றும் 8MP முன்பக்க கேமரா வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.கருப்பு மற்றும் ஐஸ் நிறங்களில் கிடைக்கிறது.
நோக்கியா C31
இதன் மேற்கட்டமைப்பும் 90 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டுள்ளது.
4GB ரேம் மற்றும் 128GB ரோம் 5,050mAh பேட்டரி திறனுடன் 10W வேகமான சார்ஜிங் வசதி 6.7 இன்ச் IPS LCD HD+ டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது 13MP + 2MP + 2MP பின்பக்க கேமரா வசதி மற்றும் 5MP முன்பக்க கேமரா வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.சார்க்கோல் , சியான் மற்றும் மின்ட் நிறங்களில் கிடைக்கிறது.Unisoc SC9863A ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.