உலக அளவில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் தங்களின் தகவல் பரிமாற்றத்துக்கு ட்விட்டரை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்திய அளவில் Twitter இல் அதிகமாக Followers களை கொண்டவர்களின் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி முன்னணியில் இருந்து வருகிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை ட்விட்டர் கணக்கு இல்லாத தலைவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மேல்மட்ட தகவல் பரிமாற்றத்தில் இன்று Twitter முக்கிய பங்கு வகித்தது வருகிறது.
ஒரு விஷயத்தை ரத்தின சுருக்கமாக, ஒரு ஹைக்கூ கவிதையை போல சொல்வதற்கான இடம் என்பதால் பிரபலங்கள் மத்தியில் ட்விட்டருக்கு இவ்வளவு வரவேற்பு. இதேபோன்று, ஒரு தலைவர் மீதான எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஹேஸ்டேக்கை உருவாக்கி அதனை ட்ரெண்ட்டாகும் நடைமுறையும ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் மத்தியில் படுபிரபலம். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் #GoBackModi என்ற hashtag இதற்கு ஆக சிறந்த உதாரணம்.
இப்படி தலைவர்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் hashtag கள் Twitterஇல் அவ்வபோது ட்ரெண்ட்டாகி வரும் நிலையில், தற்போது அமெரிக்கா அதிபர் தொடங்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஒரு வார்த்தையில் ட்விட் போட அவை தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இன்று ‘democracy’ என்று ட்விட்டரில் ஒரு வார்த்தையில் பதிவிட்டிருந்தார். இந்த விஷயத்தை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனே தமது ட்விட்டர் பக்கத்தில் ‘திராவிடம்’ என்று ஒரு வார்த்தை பதிவை வெளியிட்டுள்ளார். முதல்வர் இப்படி களமிறங்கியது கண்ட எதிர்க்கட்சி தலைவர்
தன் பங்குக்கு ‘தமிழ்நாடு’ என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என இருவரும் இப்படி Twitter இல் கலக்கி கொண்டிருக்க, சோஷியல் மீடியாக்களில் படுபிரபலமான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
மட்டும் சும்மா இருப்பாரா என்ன? ‘தமிழ்த்தேசியம்’ என பதிவிட்டுள்ளார்.
இப்படி அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு வார்த்தையை Twitter இல் பதிவிட்டு வர, இந்த ட்ரெண்ட்டை ‘Cricket’ என்று பதிவிட்டு இந்தியாவில் தொடக்கி வைத்தவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் என்பது கூடுதலான சுவாரஸ்ய தகவல்.