தற்கொலைக்குப் பயன்படும் சாணி பவுடர், எலி பேஸ்ட்; விரைவில் வரவிருக்கும் தடை… அமைச்சர் நம்பிக்கை

இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மராட்டியமும், மூன்றாவது இடத்தில் மத்திய பிரதேசமும் உள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் தற்கொலை சம்பவங்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தற்கொலை

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், திருவாரூர் வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடங்களைத் திறந்துவைத்துப் பேசினார். அப்போது, ”தமிழகத்தில் தற்கொலைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் சாணி பவுடர் மற்றும் எலி பேஸ்ட்டுகளை தடைசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தேசிய அளவிலான பிரச்னை என்பதால், தொழில்துறை செயலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோரை கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாணி பவுடர், எலி பேஸ்ட்டுகளை தனி நபருக்கு விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

தற்கொலை முயற்சி செய்யும் பலரும் சாணி பவுடர், எலி மருந்து ஆகியவற்றையே அதிகம் சாப்பிட்டு இறக்கின்றனர். எனவே தற்கொலைக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களில் இவை இரண்டும் முக்கிய காரணியாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்கொலை

வீட்டில் கிருமி நாசினியாகத் தெளிக்க சாணி பவுடர் பயன்படும், அதை வீட்டில் வைத்திருப்பதால், அதனை எடுத்துச் சாப்பிட்டு இறக்கின்றனர். அதே போல எலி மருந்தும் எளிதாகக் கிடைத்து விடுவதால் வாங்கிச் சாப்பிட்டு இறக்கின்றனர்.

எனவே, இவற்றை தனியாக வருபவர்களுக்குக் கொடுக்கக் கூடாது எனவும், அதனை கடைகளில் வெளியில் தெரியும்படி விற்பனை செய்யக்கூடாது எனவும், கடந்த டிசம்பரில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற தற்கொலை தடுப்புதின விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.