புதுடெல்லி: ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.24,710 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.30,951 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.42,067 கோடி உட்பட) ரூ.77,782 கோடி வசூலாகி உள்ளது. இதைதவிர கூடுதல் வரி (செஸ்) ரூ.10,168 கோடி (இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.1,018 கோடி உட்பட) கிடைத்து உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து ஒன்றிய தொடர்ந்து ஆறாவது மாதமாக ஜிஎஸ்டி மூலம் மாதந்தோறும் ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.