தொழிலதிபரான காஷ்மீர் மாடல்.. பெங்களூரில் துருக்கி ஆடைகள்!

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாடல் ஒருவர் தொழிலதிபராக மாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இவர் துருக்கி கலாசார ஆடைகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

இவர் ஆரம்பித்த ஜவுளி தொழில் தற்போது மிகவும் சிறப்பாக லாபத்துடன் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

முகேஷ் அம்பானியின் அடுத்த ஆட்டம்.. ஆடைகள் நிறுவனத்தில் ரூ.950 கோடி முதலீடு..!

காஷ்மீர் மாடல் அழகி

காஷ்மீர் மாடல் அழகி

30 வயதான காஷ்மீர் மாடல் ஆசிப் மெஹ்ராஜ் தொழிலதிபராகி, ஆடை பிராண்ட் ஒன்றை நிறுவி, துருக்கியில் இருந்து ஆடைகளை இந்திய வாடிக்கையாளர்களுக்கு இறக்குமதி செய்து வருகிறார்.

பெங்களூரில் துருக்கி ஆடைகள்

பெங்களூரில் துருக்கி ஆடைகள்

பேஷன் மாடலான ஆசிப் மெஹ்ராஜ் தனது பிராண்டிற்கு ‘எபிக் டச் பை ஆசிஃப் மெஹ்ராஜ்’ என்று பெயர் வைத்துள்ளார். இவர் பெங்களூரு நகரில் துருக்கி ஆடைகள் நிறைந்த ஒரு சிறிய கடையை அமைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு அறிமுகம்
 

இந்தியாவுக்கு அறிமுகம்

தனது இளம் வயதிலேயே காஷ்மீரில் இருந்து வெளியேறி பெங்களூரில் செட்டிலாகிவிட்ட மாடல் ஆசிஃப் துருக்கி கலாச்சார ஆடைகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துவதே தனது நோக்கம் என்று ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நண்பர் கூறிய யோசனை

நண்பர் கூறிய யோசனை

கடந்த 2016ஆம் ஆண்டு மாடல் அழகன் ஆசிப் மெஹ்ராஜ், ஒரு நண்பரை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது இந்திய மக்கள் துருக்கி கலாச்சார ஆடைகளை விரும்புவதால், இந்தியாவில் துருக்கி ஆடைகளை இறக்குமதி செய்ய அவர் எனக்கு யோசனை வழங்கியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு உறவு

இரு நாட்டு உறவு

துருக்கியில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியா, துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகளை உருவாக்க உதவும் என்று கூறிய மாடல் அழகன் ஆசிப் மெஹ்ராஜ், துருக்கி ஆடைகளை இந்தியர்களுக்கு எளிதாக கிடைக்க செய்துள்ளதாக கூறினார்.

துருக்கி ஆடைகள்

துருக்கி ஆடைகள்

இதற்கு முன்னர் துருக்கி ஆடைகளை வாங்க துருக்கிக்கு செல்ல வேண்டும் அல்லது ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும், என்றும், இதனால் ஆடைகள் இந்தியா வர தாமதம் ஆகும் என்றும், ஆனால் நாங்கள் எங்கள் கடையில் துருக்கியின் அனைத்து ஆடைகளையும் வைத்துள்ளோம் என்பதால் இந்தியா முழுவதிலுமிருந்து மக்கள் துணிகளை வாங்க எங்கள் கடைக்கு வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Kashmiri Model Turned Entrepreneur Sets Up Clothing Brand, Introduces Turkish Culture To India

Kashmiri Model Turned Entrepreneur Sets Up Clothing Brand, Introduces Turkish Culture To India | தொழிலதிபரான காஷ்மீர் மாடல் அழகி.. பெங்களூரில் துருக்கி ஆடைகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.