எண்ணெய் விலை வரம்பை G7 தலைவர்கள் முடிவு செய்ய இருப்பதாக தகவல்
ஈட்டும் தொகையில் போரை முன்னெடுப்பதை தடுக்கவும் G7 தலைவர்கள் முடிவு
ரஷ்யா ஈட்டிவரும் வருவாயைக் குறைக்கும் நோக்கில் அந்த நாட்டின் எண்ணெய் விலை வரம்பை G7 தலைவர்கள் முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மீது G7 மேற்கத்திய நாடுகளின் நிதி அமைச்சர்களால் விலை வரம்பு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் இனி முதல் எண்ணெய் தொடர்பான ரஷ்யாவின் நெருக்கடிக்கு வாய்ப்பிருக்காது என்றே கூறப்படுகிறது.
@upstreamonline
மட்டுமின்றி, இதனால் ரஷ்யா வருவாய் ஈட்டுவதும் கட்டுப்படுத்தப்படும் என்பதுடன், அதனால் ஈட்டும் தொகையில் போரை முன்னெடுப்பதை தடுக்கவும் G7 தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பிரித்தானிய நிதியமைச்சர் நாதிம் ஜஹாவி தெரிவிக்கையில், இந்த நடவடிக்கை உக்ரைனில் போருக்கு நிதியளிக்கும் புட்டினின் முயற்சிகளை கட்டுப்படுத்தும் என்றார்.
இந்த திட்டமானது தமது தனிப்பட்ட முன்னுரிமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எண்ணெய் ஏற்றுமதியால் ஈட்டும் தொகையில் இனிமேலும் புடின் போருக்கு நிதி ஒதுக்குவதை அனுமதிக்க முடியாது எனவும் நாதிம் ஜஹாவி குறிப்பிட்டுள்ளார்.
@pa
இந்த காட்டுமிராண்டித்தனமான படையெடுப்புக்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம், இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்காக உக்ரைன் போராடும் போது எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் எனவும் நாதிம் ஜஹாவி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மொத்த ஐரோப்பாவுக்குமான எரிவாயு வழங்கலை விளாடிமிர் புடின் நிறுத்தலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.